Thursday, March 26, 2009

தேர்தல் "மஜா "



மஜா


தேர்தல் நேரத்தில் சொல்லுவதும் நல்லது தான். தேர்தலில் ஒருவேளை தோற்றுப் போய் விட்டால் என்ன செய்வது என்ற கவலையில் இருக்கும் இந்தியத் தாத்தா அரசியல்வாதிகளுக்கு உதவியாய் இருக்கலாம்.

அரசியலில் இருப்பவருக்கு ஐம்பது வயசே ஜாஸ்தின்னு தான் படுகின்றது. அதற்குள் ஓய்வு கொடுத்துடணும். பாங்காக், பாரிஸ் ன்னு அவரவர் விருப்புக்கேற்ப போய் மஜா பண்ணிடணும்.

வசதிதான் அவர்களிடம் கொட்டிக்கிடக்கின்றதே. சுவிஸ் வங்கியின் கறுப்புப்பணத்தில் அதிக அளவு இந்திய முதலீடு. நூறு கோடி மக்களின் சில நூறு தலைவர்கள் சம்பாதித்த கறுப்புப் பணம் 64 இலட்சம் கோடி ரூபா (1456 பில்லியன் டாலர்கள்) . ஒரு ரூபா சம்பளமாக எடுத்தவர்களே கோடீஸ்வரர்களாய் இருக்கும் நாட்டில் பணமா ஒரு பிரச்சனை.

சம்பாதிக்கும் வழி?
இதையெல்லாம் வைத்து ஆண்டு அனுபவிக்காது என்ன ஒரு அரசியல் வேண்டிக்கிடக்கு ..? அதிகார ஆசையில் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தே முதுகுவலியில் எத்தனை நாள் தான் அவதிப்படுவது.

அண்ணல் விவேகானந்தர் ஊருக்கு நூறு இளைஞர்களைத் தாருங்கள் இந்தியாவை (உலகத்தையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்) மாற்றிக்க்காட்டுகின்றேன் என்றார். நாங்கள் இந்த சில நூறு கிழவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது.



வாக்கிங் போற வயதில்

சில நூறு கிழவர்களை இளைஞர்களாக்கும் தேவைக்காக தேர்தலைப் பயன் படுத்தினால் என்ன..? அவர்களும் 80 உம் தாண்டி எத்தனை காலம் தான் உழைப்பது?
எந்த சீதாப்பிராட்டியாருக்கு ?

20 இல் வளைக்கவேண்டிய அம்பை 80 இல் வளைக்க ஏன் இந்தப்பாடு. எந்த பல்லுப்போன சீதாப்பிராட்டியை வளைக்க இவ்வளவு வேதனை.

இப்படியிருக்கணும் .. எத்தனை ராப்(பி)ரி(யை)கள்


இவர்கள் பாவம் எத்தனை நீங்காத கனவுகளுடன். இவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம்னு யோசித்ததில் ... தேர்தலைப் பயன்படுத்தலாம்னு பட்டது.. உங்களுக்கு.

No comments:

Post a Comment