Thursday, March 26, 2009

பெண் ணீ (ஈ)யம் வாங்கலையோ?


ரொம்ப நாளாவே ஒரு கடுப்பு இந்தப் பெண்ணீ(ஈ) யம் பேசுபவர்கள் மேல். ரொம்பத்தான் ஆட்டம் போடுறாங்க. ஏன் ? எதற்கு ? என்றே தெரியாமலே காரியம் ஆற்றுகின்றார்கள். அஸ்.ராமகிருஸ்ணன் vs குட்டி ரேவதி புகழ் துப்பட்டா காமடியில் இருந்து முலை யோனின்னு எல்லாம் முந்தானை விலத்திக்காண்பிச்சது வரை கட்டுடைக்கிறேன் பேர்வழின்னு "காட்டு" உடைப்பு தான் எல்லோருமே.

ஆண் பெண் உறவென்பதுவும் ஒரு அழகான இயற்கையின் உந்துதல்தான் என்பதை இவர்கள் கொச்சைப் படுத்துகின்றார்கள். ஆண்கள் பெண்களைப் பார்ப்பதுவும் பெண்கள் ஆண்களைப் பார்ப்பதுவும் இயற்கையின் உந்துதல் தான். மனிதன் போட்டிருக்கும் அனைத்து வேஷங்களின் உடைப்பிற்குப் பின்னால் இருப்பது மனிதன் ஒரு விலங்கு என்ற உண்மைதான்.

மீசை வளர முன்னரே பெண்களை அறிய முற்படுவது ஆணின் இயல்பு . அது போலவே பெண்களுக்கும் இருக்குக்கூடிய இயல்புதான் அது. நான் பெண்ணாக இல்லாததால் பெண்களைன் சிந்தனை இயல்பு பற்றி அதிகம் சொல்ல முடுயாது.

ஆனாலும் காதல் காமம் என்பது இயற்கையின் தூண்டுதல் என்ற அளவில் புரிந்து கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் கூடுமாயிருக்கின்றது.

ஆண் பெண் இயற்கை பற்றி "தமிழில்" டாக்டர் சாலினி அழகாகச் சொல்லுகின்றார். இயற்கையின் தேவை பரம்பரைப் பெருக்கம் என்பதற்கும் அப்பால் ஆண் பெண் உறுப்புகளில் எதுவுமே இல்லை.

வாழ்க்கையில் ஒரு அழகியல் உணர்வினால் "கச்சையை மீறி திமிர்த்த கொங்கைகள் .." என்று சாண்டில்யன் எழுதினால் அது ஆணாதிக்கமாம். உலகக் கருத்தாய் முன்மொழியப்பட்ட வள்ளுவன் குறளே "காமத்துப்பால்" என்ற ஒன்றை சொல்லிப்போகின்றது. இயற்கை பற்றி அறிந்தவர்கள் அவர்கள். கோவில் கோபுரங்களில் நிர்வாணச் சிற்பங்கள் இடம் பெறுவது ஒன்றும் விரசத்தால் அல்ல. வாழ்க்கையை அறிதல் உணர்தல் அதனில் நின்று நீங்குதல்...அவற்றை அறிந்தவர்கள் முன்னோர்கள்.

புஸ்பா தங்கத்துரையை சுஜாதாவை (அவருடைய dairy farm வாக்கியம் போட்ட ரீசேர்ட்டுகளும் மெக்ஸிக்கன் சலவைக்காரி ஜோக்குகளும் தேடிப்படிக்காதவர்கள் ம்ஹீம் ..) விமர்சனம் செய்தவர்கள் முலை யோனி என்று தாங்களே அதிரடியாக எழுதியதில் சாதித்தது தான் என்ன? பல நண்பர்களுடன் சேர்ந்து வாழ்தல் பற்றியெல்லாம் எழுதுகின்றார்கள். இது தானா இவர்கள் வேண்டும் பெண்ணீ(ஈ)ய விடுதலை?

எஸ்.பொ வின் ஒரு கதையில் "பாவாடைக்குள் சவர்க்காரம் போட்டுத் தேய்க்கின்றாள். இரவின் வேலையின் அழுக்கை அகற்றவோ என்னவோ? "என்று வரும். அது உண்மையும் கிளுகிளுப்புமானது. பதின்ம வயதில் எஸ்.பொ வைத் தேடிப்பிடித்து வாசிக்கத் தூண்டியது.

சாண்டில்யனின் கதைகளைப் படித்தவர்களைக் கேட்டுப்பாருங்கள். அது வரலாற்றை அறிந்து கொள்வதையும் விட வேறொன்றுக்காகவும் என்பதைக்கூறுவார்கள். நளினமாக ஆங்காங்கே பெண்களைப்பற்றி வர்ணித்துப் போவார். "மாலை இளம் வெய்யிலில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மஞ்சள் அழகியின் பொன்வண்ணமேனி.." மிச்சமெல்லாம் உங்கள் கற்பனைக்குத் தான்.

இதையெல்லாம் எதிர்த்தவர்கள் குஸ்புவிற்குக் கோவில் கட்டியவர்களை விட்டது போலவே அவரிற்கு செருப்படி விளக்குமாற்றடி என வெளிக்கிட்டவர்களை விட்டு விட்டார்கள். அந்த ஆண்களை அல்லது பெண்களைக்கேட்டுப்பாருங்கள் திருமணத்திற்கு முன்னால் உறவு கொள்ளாதவர்கள் எத்தனை பேர் என்று . விரல் விட்டு எண்ணிவிடலாம்.

பெண்ணை ஆண் வர்ணிப்பதை எதிர்ப்பவர்கள் மும்பாய் ரெட் லைற் ஏரியாவை விட்டு வைத்திருக்கின்றார்களே? பாரீஸில் ஆன்வர் பிக்கால் பகுதிகளுக்குப் போனால் ரோட்டோரமெல்லாம் கட்டழகுக் கன்னியரும் ஆட்டமும் பாட்டமும் தான் கொள்ளையிடும். இதே ஆஅட்டத்தையும் பாட்டத்தையும் தான் காவிரிப்பூம் பட்டினத்தில் நம் முன்னோரும் செய்து காட்டினரே. இதனால் எல்லாம் நம் சமூகம் தலை குனிந்து போனதா? தரம் தாழ்ந்து போனதா?

ஆம்ஸ்ரடாமில் பெண்களை கண்ணாடிக்கூண்டில் விட்டு வேடிக்கைப் பொருளாகவும் விலைப்பொருளாகவும் காட்டுகின்றார்கள். அங்கே உங்கள் பெண்ணீ(ஈ)யம் விலை போகாதோ?

ஒரு படத்தில்(பெயர் தெரியவில்லை) கதாநாயகி கிரிக்கட் ஆடுவார். பாலை அடித்து விட்டு ஓடி வருவார். காமிரா குலுங்கக் குலுங்க அவர் ஓடி வருவதை மிக குளோசப்பில் காட்டும். பார்த்துக் கொண்டிருக்கும் கதாநாயகனிடம் நண்பன் இளித்துக்கொண்டு - நம்மிடமும் தான் - சொல்வான் ' ஆடினா இப்படியொரு பாலை ஆடணும்டான்னு ". கதாசிரியர் தன் இச்சையைப்பூர்த்தி செய்ததை விட கலர் கலராய் குளோஸப்பில் காட்டிய சினிமாக் காரனிடம் உங்கள் பெண்ணீ(ஈ)யம் இளித்துக் கொண்டிருக்கின்றதா?

கறுப்பு வெள்ளையில் கதையெழுதுபவனை விட கலர் காட்டும் இவர்கள் சமூகத்திற்குக் கேடானவர்களே. அதையும் விட பெண்ணீ(ஈ)ய போதையில் "என் யோனியில் பம்மிப் பம்மி நிரப்புவதே உங்கள் ஆணாதிக்கம் ..அதை மறுதலிப்பதே பெண்விடுதலை" என்பவர்களே... இயற்கை ஒரு நாளும் தோற்றுப் போவதில்லை.

இயற்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களினால்த் தான் தம் குழந்தைகளிடமும் "இயற்கையாய்"சொல்லிக் கொடுக்க முடியாது தவிக்கின்றார்கள் பெற்றோர்கள்.

அமெரிக்கா ஐரோப்பா பள்ளிகளில் எஸ்கர்ஸன் போகும் போது காண்டமும் கொண்டு போகச் சொல்லித் தருகின்றார்கள். இத்தகைய ரிலீவ் பாழப்போன இந்திய சமூகத்தில் வாழும் அனைத்துப் பெற்றோர்களுக்கும் கிடைப்பதில்லை. தம் குழந்தைகளைப் "பெரிவர்களாக" இருக்கச் சிந்திக்க சொல்லித் தர பெற்றோரே முடியாது தவித்துக் கொண்டிருக்க இப்பெண்ணீ(ஈ)ய வாதிகள் இன்னும் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

திருமணம் ஆகாது ஆண் நண்பர்களுடன் வாழ்வதே கட்டுடைப்பு என்று சொல்லித் திரிபவர்களே திருமணம் செய்து தாயாக வாழச் சொல்லிக் கொடுத்தால் என்ன? குறைந்தா போய்விடும்.

No comments:

Post a Comment