Thursday, March 26, 2009

ஆமையில் பெரிய ஆமை


அதென்ன பெரிய ஆமைன்னு நீங்கெல்லாம் மயிர் உதிர்த்து யோசிக்க முன்னாடியே சொல்லிடுறேன். அது பொறாமதாங்க. அது தான் என்னையும் பிடிச்சிருக்கு.

நாகரீக கோமாளி சாருன்னு நம்ம பிளீச்சிங் பவுடர் ஒரு பதிவு போட்டிருக்காப்பல. அவருக்கு சாரு மேல காண்டு. எப்படி இந்தாளால இத்தினி வாசக வட்டம் வைச்சு ஜால்ராப் பண்ண முடியுது அப்பிடின்னு. ப்ளீச்சிங் அதையும் "அவர் எல்லாரையும் கலாய்கலாம், நாம அவர கலாய்க்க கூடாதா அதுவும் லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது.." என்னு அவர் வாயாலயே சொல்லிப்புட்டாரு.

ஒத்தைக்கால் கொக்கு கணக்கா காத்திருந்தவருக்கு அடிச்சது அதிர்ஷ்டம். சாரு kim ki duk ஐயும் The Isle என்ற படத்தையும் "படங்"காட்டப்போக ப்ளீச்சிங் பவுடர் போட்டு வெளக்கிட்டாரு.

அதெல்லாம் ஒண்னும் இல்லைங்க நமக்கும் சான்ஸ் கெடைச்சா கெடச்ச காப்பில சைக்கிள் ஓட்டக்கத்துக்கிட்டாத்தான் இந்த "பதிவு" ஒலகத்தில நெலைச்சு நிக்கலாம்னு பட்சி சொல்லிக்கிட்டிருக்கு.

ஆனா பாருங்க காமன்ஸ் போடுறேன் பேர்வழின்னு "மீ த பஸ்ட்" "மீ த செகண்ட்" போடுறவங்களை என்னான்னு சொல்லுறது. மூணாவது வந்தவர் முந்திட்டாங்களேன்னு முறுக்கிக்கிட்டுப்போவது ரொம்ப "பொட்டை"த்தனமால்ல இருக்கு. ஆஜர் ஆயிட்டோம் நம்ம பக்கத்தையும் "இப்படிப்பட்ட காமன்ஸ்" போட்டு ரொப்பிடிங்கன்னு சொல்லாம சொல்லிடுறாங்க.

அதிலயும் சிலபேரு "பதிவைப்பாத்துட்டு அப்புறம் எழுதறோம்" அப்பிடின்னு போட்டுட்டுப் போயிடறாங்க. அவங்க வருவாங்களா பார்ப்பாங்களா என்பதற்கும் அப்பால இவருக்கு ஒரு தார்மீகக் கடமை ஏத்திடறாங்க. இவரு போய் அவர் பதிவில ஏதாச்சும் போடணும். நாய்ங்க ஒண்ணுக்குப்போகும் போது பாத்திருக்கீங்களா? மரம் மரமா மோந்து பாத்திட்டுப் போகும் ..அப்பிடிப்போகும் போது ஒரு மரத்துக்கிட்ட காலைத் தூக்கிப் போகும். அது என்னான்னா இது நாம ஏற்கனவே போன இடம்னு அதற்கு ஞாபகம் வந்திடும் .அதுதான் இவங்களும் அப்பிடி ஒரு நெனைப்பிலதான் " அப்புறம் வருவாங்களோ " என்னவோ?

இதும் போக இன்னும் சிலர் இருக்காங்க . சொல்ல வந்ததை துண்டு துண்டா ஒடச்சிப்போடுவாங்க... மூணு நாலு ஹிட்டாகி வழுக்குமரம் ஏறிட்டிருக்கும் இவர் பதிவு மறுமொழி இட்டவர் பகுதியில்.

அதே நன்றிக்கடனை இவரும் துண்டு துண்டாய் ஒடைச்சு ஒட்டுவாரு. என்னவாய் யோசிக்கிறாங்க மக்களெல்லாம். பதிவுகளை சூடாக்குவது பத்தி பதிவே போட்டும் பாக்குறாங்க.

இதையெல்லாம் பாத்து பெரியாமை ப்டிச்சதால நானும் யோசித்தது தான் இந்தப்பதிவு. நாலு பதிவரைப்பிடிச்சு காட்டுற மாதிரி காட்டி விட்டால் நம்ம பதிவும் ஹிட்டாகுமேன்னு.

இந்த நாலு பதிவரும் அவரோட நாப்பது நண்பர்களும் பாக்கிறது போக ..இங்க இருக்கிற நாலாயிரம் பதிவர்களும் "நாலு பேர்" கனவுல நாலு முறையாவது நம்ம பதிவை எட்டிப்பார்க்க மாட்டாங்ளான்ன கணக்குத்தான்.

பொல்லாத பதிவுலகம்னு நாலு பேரு தலைல அடிச்சுக்கத்தான் செய்வார்கள். நாலு பேரப்பத்தி யோசிச்சால் நாம எப்பிடிக் குப்பை கொட்டுறது.

2 comments:

Anonymous said...

ME THE FIRST

"திங்"கர் said...

அடடே நம்ம கிட்டேவா..? படிச்சப்புறம் தானே சொல்லியிருக்கீங்க.. ரொம்பக் குசும்புதான் போங்க...

Post a Comment